செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (14:07 IST)

இப்போ அனிருத் ரொம்ப பண்றாரு; நமக்கு ஒத்துப்போனா பார்க்கலாம்: தனுஷ்

அனிருத் இப்ப ரொம்ப வெஸ்டர்ன் பாலோ பண்றாரு. ஒரு கதைக்கு அப்படிப்பட்ட மியூசிக் தேவைப்பட்டால் கண்டிப்பா அவர் கூட சேர்ந்து பணியாற்றுவேன் என்றார் தனுஷ்.


 

 
3 படத்தில் தொடங்கி வேலையில்லா பட்டதாரி, மாரி என தனுஷ் - அனிருத் கூட்டணி பட்டையை கிளப்பியது. மேலும் தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, நானும் ரவுடிதான் போன்ற படங்களும் வெற்றிப்பெற இசை முக்கிய காரணமாய் அமைந்தது.
 
இந்நிலையில் சில நாட்களாக அனிருத் அஜித், விஜய் போன்ற ஹீரோக்களுக்கு இசை அமைக்க தொடங்கிவிட்டார். வேதாளம் படத்திற்கு கடுமையாக உழைத்து மாஸான இசையை கொடுத்துள்ளார். தனுஷ் இயக்கிய பவர் பாண்டி மற்றும் தற்போது வெளியாகியுள்ள விஐபி-2 ஆகிய இரண்டு படத்திலும் அனிருத் இசையமைக்கவில்லை.
 
தொடர்ந்து இருவரும் சேர்ந்து இருந்துவிட்டு திடீரென பிரிந்து தனித்தனியே வேலை செய்ய தொடங்கியதால் இவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது என்று பல செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் தனுஷ், அனிருத் உடன் சேர்ந்து பணியாற்றுவது குறித்து கூறியதாவது:-
 
அவருக்குன்னு ஒரு ஸ்டைல் ஆப் மியூசிக் இருக்கு. இப்ப ரொம்ப வெஸ்டர்ன் பாலோ பண்றாரு. ஒரு கதைக்கு அப்படிப்பட்ட மியூசிக் தேவைப்பட்டால் கண்டிப்பா அவர் கூட சேர்ந்து பணியாற்றுவேன் என்றார். 
 
அப்போ அடுத்து மாரி 2 திரைப்படத்தில் அனிருத்தை எதிர்பார்க்காலாம் என கூறப்படுகிறது.