செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 டிசம்பர் 2020 (21:33 IST)

அய்யப்பனும் கோஷியும்” பட நடிகர் நீரில் மூழ்கி பரிதாப பலி!

அய்யப்பனும் கோஷியும்” பட நடிகர் நீரில் மூழ்கி பரிதாப பலி!
சமீபத்தில் சூப்பர் ஹிட்டான மலையாள திரைப்படமான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிர் இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அய்யப்பனும் கோஷியும்என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அனில் நெடுமங்காடு. இவர் தோடுபுழாவில் உள்ள மலங்கர அணையக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு அவர் சென்றுள்ளதாக தெரிகிறது இதனை அடுத்து அவர் திடீரென நீரில் மூழ்கினார்
 
இதனை அடுத்து அவரை மீட்க நண்பர்கள் போராடியதாக தெரிகிறது. நீரில் உள்ளே மயக்கமுற்று கிடந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது நண்பர்கள் அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
நீரில் மூழ்கி உயிரிழந்த நடிகர் அனில் நெடுமங்காடு அவர்களின் உயிரிழப்பிற்கு மலையாள திரையுலக கலைஞர்கள் பலர் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாபெரும் வெற்றி படத்தில் நடித்த நல்ல நடிகர் ஒருவர் மறைந்தது மலையாள திரை உலகிற்கே பேரிழப்பு என்று பலர் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டு வருகின்றனர்