1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (09:57 IST)

ஹேப்பி மூடில் ஆண்ட்ரியா... ட்ரிப் அடித்த வீடியோ இணையத்தில் வைரல்!

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
 
இந்நிலையில், தற்போது தரமணி படத்தில் வரும் காட்சி போன்று படகில் மகிழ்ச்சியாக சென்ற வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.