1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 27 மே 2020 (08:20 IST)

அது Roof Tile முருகேசா.... நான் கூட ஒரு செகண்ட்ல அப்டித்தான் நெனச்சிட்டேன்!

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்போது வீட்டின் மொட்ட மாடியில் யோகா செய்த புகைப்படத்தை வெளியிட அது கிண்டலுக்குள்ளாகியுள்ளது. மிகவும் இறுக்கமான உடையணிந்துள்ள அவரின் பேண்ட் கிழிந்துவிட்டதோ என ஷாக்காகிய சிலர் பின்னர் அது டைல்ஸ் கல் என்பதை சுதாரித்துக்கொண்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.