புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (10:33 IST)

படம் ஹிட்டானாலும் இன்னும் அந்த பிஸ்னஸ் நடக்கலயாம்… அந்தகனுக்கு வந்த சோதனை!

பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தெதி திரையரங்குகளில் ரிலீஸானது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்து, சில ஆண்டுகள் காத்திருந்து இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள். அந்த  நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தகன் திரைப்படம் வெளியாகி முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் மற்றும் டிமாண்டி காலணி ஆகிய படங்களின் வருகையால் இன்னும் கூடுதல் வசூலை ஈட்ட முடியாமல் போனது.

இந்நிலையில் இப்போது சில மல்டிப்ளக்ஸ் திரைகளில் இந்த படம் சில காட்சிகள் ஓடிவரும் நிலையில் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் இன்னும் நடக்கவில்லையாம். அதனால்தான் படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.