1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (16:07 IST)

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - இது சிம்பு படத்தின் பெயர்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - இது சிம்பு படத்தின் பெயர்

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார். அதில் சிம்புக்கு 3 கெட்டப்புகள். சிம்பு கெட்டப் மாற்றி நடிக்கும் முதல் படம் இது. 


 
 
இந்தப் படத்துக்கு ட்ரிபிள் ஏ என பெயர் வைத்திருந்தனர். அதாவது மூன்று ஏ. இது சர்ச்சையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தனது படத்தின் பெயர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என ட்விட்டரில் சிம்பு கூறியுள்ளார்.
 
இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நேற்று - மே 1 அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டனர். 
 
மூன்று நாயகிகள் இதில் நடிக்க உள்ளனர். அவர்களுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது.