1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth.K
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (11:46 IST)

அன்றே விஜய்யை “சூப்பர் ஸ்டார்” என்று சொன்ன இந்தி நடிகர்! – எப்போது தெரியுமா?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் வைரலாகியுள்ளது. ஆனால் விஜய்யை பல வருடங்கள் முன்பே ஒரு இந்தி நடிகர் சூப்பர் ஸ்டார் என சொன்னார். அதுபற்றி உங்களுக்கு தெரியுமா?



சமீப காலமாக தமிழ் சினிமாவில் “சூப்பர் ஸ்டார்” பட்டம் குறித்த விவாதம் சூடாகியுள்ளது. இதுநாள் வரை “சூப்பர் ஸ்டார்” என்றால் அது ரஜினிகாந்த் தான் என்றிருக்கும் நிலையில், அந்த பட்டத்திற்கு போட்டிகளும் இருந்து வருகின்றது. இந்நிலையில்தான் ஜெயிலர் பட பாடலில் “பேரை தூக்க நாலு பேரு.. பட்டத்தை பறிக்க நூறு பேரு” என வரிகள் இடம் பெற்றது.

மேலும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா மேடையிலும் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கதையை வைத்து சமூக வலைதளங்களில் விஜய்யை மையப்படுத்தியும் பல விவாதங்கள் நடந்து வருகிறது. விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெற முயல்கிறாரா என்ற விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில் 2012ம் ஆண்டிலேயே விஜய்யை பிரபல இந்தி நடிகர் ஒருவர் சூப்பர் ஸ்டார் என அழைத்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி நடித்த சிறுத்தை படம் செம ஹிட். அதன் இந்தி ரீமேக்கான ரவுடி ரத்தோரை பிரபுதேவா இயக்க அக்‌ஷய் குமார் நடித்தார். அதில் ஒரு பாடலில் விஜய் கேமியோ ரோலில் சில காட்சிகள் தோன்றுவார். அந்த காட்சியில் விஜய்யை கண்டதும் அக்‌ஷய் குமார் “அங்க பாருங்க சூப்பர் ஸ்டார் விஜய் அண்ணா” என்று கத்துவார். விஜய்யை அப்போதே இந்தியில் சூப்பர் ஸ்டார் என இந்தி நடிகர் ஒருவரே அழைத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K