திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (18:01 IST)

"டெலிவிரி டேட் சொல்லுங்கோ" எமி ஜாக்சனை நச்சரிக்கும் ரசிகர்கள்!

மதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.


 
எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்குள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.
 
ஆனால், அதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலை படாத எமி தொடர்ந்து தன் கர்ப்பமாக இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார். மேலும் கர்ப்ப காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்.  


 
அந்த வகையில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும் பயனளிக்கும் யோகாசனத்தை செய்து குழந்தைக்கும் தாய்க்கும் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் டிப்ஸ்களை கொடுக்கும் வகையில் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த எமியின் ரசிகர்கள் உங்களுக்கு எப்போ டெலிவரி? டேட் சொல்லுங்ககள் என்று ஆர்வத்துடன் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.