Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'அம்மா'வில் இருந்து 'பாட்டி'யாக புரமோஷன் ஆன சரண்யா


sivalingam| Last Modified செவ்வாய், 16 மே 2017 (05:14 IST)
கிட்டத்தட்ட இன்றைய இளையதலைமுறை நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவாக நடித்தவர் சரண்யா. மனோரமாவுக்கு நிகராக அம்மா கேரக்டர் என்றால் உடனே கூப்பிடு சரண்யாவை என்ற அளவில் அனைத்து இயக்குனர்களின் மனதிலும் இடம் பெற்றவர்


 


இந்த நிலையில் இதுவரை அம்மா கேரக்டரில் கலக்கி வந்தவர் முதன்முதலாக 'பாட்டி' கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'இட்லி' என்ற படத்தில் நாயகிக்கு பாட்டியாக சரண்யா நடிக்கவிருப்பதாகவும் நாயகிக்கு ஏற்படும் பிரச்சனை ஒன்றை அவர் தனது அனுபவ ஐடியாக்களால் தீர்த்து வைப்பதாகவும் கதை உள்ளதாம்

மனோராமாவுக்கு ஒரு பாட்டி சொல்லை தட்டாதே' படம் போலவே, சரண்யாவுக்கு 'இட்லி' படம் அமையும் என படக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :