வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (10:28 IST)

முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அமிதாப் பச்சன் – பாக்யராஜ் வருத்தம் !

முந்தானை முடிச்சு திரைப்படத்தின் ரீமேக்கில் அமிதாப் பச்சன் நடிக்க விரும்பியதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜின் திரை வாழ்விலும் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மிகவும் விரும்பியதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘முந்தானை முடிச்சு திரைப்படத்தை அவருக்குத் தனியாக போட்டுக் காட்டினேன். அவருக்குப் படம் பிடித்த நடிக்க சம்மதித்தாலும் ஆக்‌ஷன் ஹீரோவான தனக்கு இந்த கதை செட் ஆகுமா என சந்தேகப்பட்டார். ஆனாலும் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிக்க சம்மதித்தார். ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளாததால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.