1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:13 IST)

அமீர்கான் சந்தித்த ஒரு நபர்… அதனால் மொத்த சமூகவலைதளமும் கோபம் – யார் அந்த நபர்?

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் துருக்கி அதிபரின் மனைவியை சந்தித்து அது சம்மந்தமான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்கான லால்சிங் சிட்டா எனும் படத்தில் அமீர்கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரின் நண்பராக தமிழ் நடிகர் விஜய் சேதுபடி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெற்று. இதில் ஆமிர்கான் பங்கேற்று நடித்து வருகிறார். இந்நிலையில் மரியாதை நிமித்தமாக அமீர்கான், அதிபரின் மனைவியை அவரது இல்லத்தில் ஆமிர்கான் சந்தித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் துருக்கி பாகிஸ்தான் ஆதரவு நாடு என்பது மட்டுமே. ஆனால் ஒரு சிலரோ மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பை இப்படி அரசியலாக்குவது அநாகரிகமானது எனக் கூறியுள்ளனர்.