செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (18:31 IST)

நீந்த சென்ற நடிகை மாயம்… தனிப்படகில் கிடந்த 4 வயது மகன்!

படகில் மகனுடன் நீந்த சென்ற நடிகை நயா ரிவெரா என்ற நடிகை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலவேறு ஆங்கில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை நயா ரிவெரா. அவர் தனது 4 வயது கலிபோர்னியாவில் உள்ள பிரு  என்ற ஏரியில் ஒரு படகை வாடகைக்கு எடுத்து தனது 4 வயது ஜோஸியுடன் சவாரி சென்றுள்ளார் நயா. நீண்ட நேரமாகியும் திரும்பாத அவரது படகை மற்றொரு படகில் சென்ற பயணி ஒருவர் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். அதில் நயாவின் மகன் மட்டும் இருந்துள்ளான்.

இதையடுத்து அவர் போலிஸுக்குத் தகவல் சொல்லவே, அவர்கள் ஏரியில் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது மகனிடம் நடத்திய விசாரணையில் நயா ஏரியில் நீந்த சென்றதாகவும், ஆனால் திரும்பி படகுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் நயாவை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது கலிபோர்னியா போலிஸ். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.