புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (15:55 IST)

ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டும் நடிகை!

நடிகை அமலா பால் இப்போது ஆன்மீகத்தில் அதிக ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் இருந்து விலகி தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் நடித்து வந்த அமலா பாலுக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு வெப் சீரிஸீல் அவர் நடித்தார். இந்நிலையில் இப்போது அவர் அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் சினிமாவுக்கு அவர் முழுக்கு போட்டாலும் போட்டு விடுவார் என்று தெரிகிறது.