Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரச்சனைக்குரிய காரில் புதுச்சேரி சென்று வியப்பில் ஆழ்த்திய அமலாபால்

Last Modified புதன், 28 பிப்ரவரி 2018 (01:07 IST)
நடிகை அமலாபால் சொகுசுக்காரை புதுச்சேரி முகவரியில் வாங்கி வருமான வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு பதிவாகி விசாரணை நடந்து வரும் நிலையில் அதே சொகுசு காரில் புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அமலாபாலின் சொகுசுக்காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் அமலாபால தன்னுடைய கண்களை தானமாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கண்தானம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமலாபால் கூறியதாவது: 'உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது. கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுகுறித்து கருத்து கூற முடியாது" என்று கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :