செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:00 IST)

அமலாபா அளித்த புகார்- பவீந்தர் சிங்குக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

amala paul bhavninder
பிரபல தமிழ் நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது நண்பர் கைது செய்யப்பட்ட  நிலையில் அவருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் அமலா பால். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான “மைனா” படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் தெய்வத்திருமகள், தலைவா, சேட்டை என பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த இவர் சில ஆண்டுகள் கழித்து விவகாரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து படங்கள் நடித்து வரும் அமலா பால்  சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள ஆரோவில் என்ற பகுதியில் உள்ள வீட்டில் அமலா பால் தங்கியிருந்தபோது அவரது நண்பரான ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அமலா பால் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீஸார் பவீந்தர் சிங்கை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  அமலாபாலை ஏமாற்றிய புகாரின் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் பவீந்தர் சிங்கிற்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அதாவது,  அமலாபாலும் பவீந்தர் சிங்கும் பதிவுத் திருமணம் செய்து, குடும்பம் நடத்தியது தொடர்பான ஆதாரங்களை  பவீந்தர் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.