1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Updated : புதன், 25 ஜூன் 2014 (19:26 IST)

சைவத்துக்கு கிடைத்த அமலாவின் ப்ளூ கிராஸ் பாராட்டு

இயக்குனர் விஜய் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி முன்னணி ஹீரோ இல்லாமல் இயக்கியிருக்கும் படம் சைவம். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்தை முன்னாள் நடிகை அமலா பாராட்டியுள்ளார்.
சைவம் படத்தில் நாம் இழந்து வரும் கிராமத்து வாழ்க்கையை காட்சிப்படுத்தியுள்ளார் விஜய். பேபி சாராவும், நாசரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தாத்தாவாக நாசரும், பேத்தியாக சாராவும் நடித்துள்ளனர். நாசரின் மகனும் சைவத்தில் நடித்துள்ளார்.
 
சைவத்தைப் பார்த்த முன்னாள் நடிகை அமலா, வருங்கால தலைமுறையினருக்கு இந்தப் படம் ஒரு பாடமாக இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மனிதர்களுக்கு மிருகங்களின்பால் தனிக்கவனம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
 
அமலா மிருகவதைக்கு எதிராக தீவிரமாக செயல்படுகிறவர். ப்ளூ கிராஸ் உறுப்பினர். அவரது இந்தப் பாராட்டு சைவத்தை முக்கியமாக்குகிறது.
 
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.