வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (22:45 IST)

நான் இரண்டாம் தாரமா? விமர்சித்தவர்களுக்கு வரலட்சுமி பதிலடி!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி. இவருக்கு சமீபத்தில்  மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்   நிக்கோலாய் சஸ்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
 
இந்த நிலையில், நிக்கோலாய்க்கு ஏற்கனவே கவிதா எனபவரை முதல் திருமணம் செய்திருந்த நிலையில்,  தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றும், 43 வயதான அவரை ஏன் வரலட்சுமி சரத்குமார் 2 வதாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பி வந்தனர்.
 
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வரலட்சுமி தனது  நிச்சயதார்த்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Varalaxmi Sarathkumar
அதில், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி  நான் கவலைப்பட மாட்டேன். அதுமாதிரி பெண்களும் மற்றவர்களைக் குறித்து கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று கேப்சனாகப் பதிவிட்டுள்ளார்.