1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:29 IST)

நான் பிச்சை எடுத்திருக்கிறேன்: விஜய் ஆண்டனி அதிர்ச்சி தகவல்

பிச்சைக்கரன் படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி, நானும் ஒரு பிச்சைக்காரன் தான் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


 

 
பிச்சைக்காரன் படம் மூலம் நாயகனாக பிரபலம் அடைந்த விஜய் ஆண்டனி ஒரு படி உயந்துவிட்டார். பிச்சைக்காரன் படம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது:-
 
நானும் ஒரு பிச்சைக்காரன் தான். மனிதனுக்கு மனிதன் பிச்சை எடுப்பதில் மாற்றம் இருக்கு. இசையமைப்பாளர் வாய்ப்புக்காக நான் பிச்சை எடுத்திருக்கிறேன். இதை நாம் வாழ்க்கைனு சொல்லுறோம்.
 
பிச்சைக்காரர்களுக்கும் குடும்பம், கனவு, வாழ்க்கை எல்லாம் உண்டு. அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் கூறியுள்ளார்.