Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தை இயக்க ஆசைப்படும் ‘பிரேமம்’ இயக்குநர்

வெள்ளி, 19 மே 2017 (11:20 IST)

Widgets Magazine

‘பிரேமம்’ படத்தின் இயக்குநரான அல்போன்ஸ் புத்ரனுக்கு, அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம்.நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் ‘பிரேமம்’ மலையாளப் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்தப் படம், சென்னையிலேயே 225 நாட்கள் ஓடியது. அவருடைய முதல் படமான ‘நேரம்’, தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸானது. அந்தப் படம் ரிலீஸாகி 4 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்நிலையில், ‘எங்க அஜித்தை வைத்து ஒரு படம் இயக்குவீர்களா?’ என அஜித் ரசிகர் ஒருவர் அல்போன்ஸ் புத்ரனிடம் சமூக வலைதளத்தில் கேட்டுள்ளார். “சென்னையில் படித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய நண்பருடன் ‘தல’ அஜித் வீட்டு வாசலில், அவரைப் பார்ப்பதற்காக மூன்று மணி நேரம் காத்துக் கிடந்திருக்கிறோம். ஆனால், இன்றுவரை அவரை நேரில் பார்க்க முடியவில்லை. ஒரு நல்ல படத்துக்காகத்தான் இந்தக் காத்திருப்பு என நினைக்கிறேன். அவருடன் இணையும் நேரத்திற்காக காத்திருக்கிறேன்” என அந்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

படப்பிடிப்பில் காயம் – மூச்சுவிடாத ஜெயம் ரவி

படப்பிடிப்பில் காயம்பட்டபோது, அதை யாரிடமும் சொல்லாமல் தொடர்ந்து நடித்திருக்கிறார் ஜெயம் ...

news

நான் இமயமலைக்கு தான் போவேன் எனக்கு வேற வழியில்லை: ரஜினிகாந்த் உருக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது இமயமலைக்கு போவது வழக்கம். இந்நிலையில் தற்போது ரசிகர்களை ...

news

நான் பச்சை தமிழன்: ரஜினி ஆவேசம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா? என்ற பேச்சு ஊர்முழுக்க ...

news

'மங்காத்தா' படத்தில் நான் தான் நடிச்சிருக்கணும்! மிஸ் ஆயிடுச்சு: கணேஷ் வெங்கட்ராமன்

த்ரிஷா நடித்த 'அபியும் நானும், கமல்ஹாசனுடன் 'உன்னை போல் ஒருவன் மற்றும் தீயா வேலை ...

Widgets Magazine Widgets Magazine