திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (19:55 IST)

பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துட்டு 5 வருஷமா சும்மா இருக்கும் இயக்குனர்! ரசிகர்கள் ஏக்கம்!

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் 5 வருடங்களாக எந்த படமும் இயக்கவில்லை.

ஒரு இயக்குனர் ஒரு ஹிட் படம் கொடுத்தால் உடனடியாக அவர் வீட்டுக்கு தயாரிப்பாளர்கள் படையெடுப்பார்கள். அந்த வகையில் 2015 ஆம் வருடம் பிரேமம் என்ற மிகப்பெரிய படத்தைக் கொடுத்தவர் அல்போன்ஸ் புத்திரன். ஆனால் அதன் பிறகு 5 வருடமாக அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இதனால் பிரேமம் படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்களான தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் அவரின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு எப்போது வரும் என்று ஏங்கி வருகின்றனர்.