நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!
தியேட்டரில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த பெண் குறித்த வழக்கில், சற்றுமுன் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஐந்தாம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியானபோது, ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது கூட்ட நெரிசலில், பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து, அவர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் கைது செய்த தகவலுடன், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படும் தகவல் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva