1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (11:59 IST)

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அர்ஜூன் அலா வைகுந்தபுரம்லூ படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிக்கும் ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மசாலா இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தல் பற்றியக் கதை என சொல்லப்பட்டதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா அச்சம் காரணமாக படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு மேல் தடைபட்டது. இப்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தொடர்ச்சியாக அவர் நடிக்க உள்ள படங்களின் படப்பிடிப்புகள் இருப்பதால் அதில் இருந்து விலகினார். அதற்கடுத்து பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

விறுவிறுப்பாக படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.