2.0 படத்தின் கதை ? முக்கிய தகவல்களை வெளியிட்ட அக்சயக்குமார்

akshay
VM| Last Modified புதன், 28 நவம்பர் 2018 (08:43 IST)

லைகா நிறுவனம் 500  கோடிக்கு மேல் செலவு செய்து தயாரித்துள்ள படம் . இயக்குநர் ங்கர் இயக்கி உள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 29ம் தேதி முப்பரிமாண(3D) தொழில்நுட்பத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்சய குமார் 2.0 படம் குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்தார்.

'2.0 மனிதனை தவிர இந்த உலகில் வாழும் மற்ற உயிரினங்களையும் பற்றி சொல்லும் படம். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல பறவைகள் மற்றும் விலங்குகள் என அனைத்திற்கும் உரியது என்பதை உணர்த்தும் படம்.

 பறவைகள் மற்றும் விலங்குகள் மனிதர்களுக்கு எதிராக ஏதும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இந்த உலகில் வாழ அவற்றிற்கும் தகுதியுள்ளது. எனவே அவைகளின் வாழ்வாதாரங்களை பாதிக்காத வகையில் இருப்பதே நல்லது"  என்றார்.



இதில் மேலும் படிக்கவும் :