வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (15:37 IST)

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான ராட்சசன் ரீமேக்… நேரடியாக ஓடிடி ரிலீஸ்

அக்‌ஷய் குமார் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள கட்புட்லி திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் "ராட்சசன்". சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இந்த படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது. தமிழில் சூப்பர் ஹிட் அடித்த இப்படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்பட்டு வருகிறது. அக்கட சினிமாவில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். அதே போல் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அக்ஷரகுமார் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமலா பால் வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

தொடர்ந்து அக்‌ஷய் குமாரின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி தோல்வி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மூலமாவது அக்‌ஷய் குமார் ஒரு வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்.