செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (18:22 IST)

தீபாவளிக்கு ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சூப்பர் ஸ்டார் திரைப்படம்!

லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லஷ்மி பாம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தான் இயக்கி நடித்த காஞ்சனா படத்தை இப்போது இந்தியில் லஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் இருவேடங்களில் நடித்துள்ளார்.

இந்தப் படம் மே 22 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்திய அக்‌ஷய் குமார் தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.