ஏன் இப்படி குழப்புகிறார் அக்‌ஷய் குமார்?


Cauveri Manickam (Suga)| Last Modified புதன், 8 நவம்பர் 2017 (21:49 IST)
‘2.0’ படத்தின் வெளியீடு பற்றி குழப்பம் ஏற்படும் வகையில் பேசிவருகிறார் அக்‌ஷய் குமார்.

 
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், அன்றைய தினம் தான் தயாரித்து, நடித்துள்ள ‘பேட்மேன்’ படம் ரிலீஸாகும் என அறிவித்தார் அக்‌ஷய் குமார். ஒரே நாளில் இரண்டு படமும் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என்பதால், ‘2.0’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்ற பேச்சு அடிபட்டது.

ஆனால், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும் என லைகா நிறுவனம் அறிவித்தது. 
ஆனாலும், தன்னுடைய அறிவிப்பையும் அக்‌ஷய் குமார் மாற்றவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “என்னுடைய படம் ரிலீஸாகவில்லையென்றால் ‘2.0’ வெளியாகும். ‘2.0’ வெளியாகவில்லை என்றால் என்னுடைய படத்தை ரிலீஸ் செய்வேன்” என்று தெளிவாகக் குழப்பியுள்ளார் அக்‌ஷய் குமார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :