ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (12:42 IST)

அஜித் படத்தில் ஒப்பந்தமான அக்ஷரா ஹாசன்

அஜித் படத்தில் ஒப்பந்தமான அக்ஷரா ஹாசன்

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க அக்ஷரா ஹாசனை அணுகியிருக்கிறார் இயக்குனர் சிவா. கதையும், கதாபாத்திரமும் பிடித்துப்போக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இயக்குனராகும் ஆசையில் இருந்த அக்ஷராவை ஷமிதாப் படத்தில் பால்கி தனுஷுடன் நடிக்க வைத்தார். தற்போது சபாஷ் நாயுடு படத்தில் கமலின் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அஜித்பட வாய்ப்பு கிடைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்