திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 நவம்பர் 2018 (21:54 IST)

அந்தரங்கப்படங்கள் லீக் எதிரொலி: அக்சராஹாசன் போலீஸ் புகார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்சராஹாசனின் அந்தரங்க செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது செல்பி புகைப்படங்கள் என்பதால் இந்த புகைப்படத்தை அக்சராஹாசனே வெளியிட்டிருப்பார் என்றுதான் பலர் கருதினர்.

ஆனால் இந்த புகைப்படங்களை தனக்கு தெரியாமல் யாரோ மர்ம நபர்கள் இணையத்தில் கசியவிட்டிருப்பதாகவும், தனது அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க கோரி மும்பை காவல்நிலையத்தில் நடிகை அக்சரா ஹாசன் புகார் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த அந்தரங்க புகைப்படங்கள் ஒரு திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டதாகவும் அக்சராஹாசன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் தனது அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் அந்தரங்க புகைப்படங்களை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி வருகிறது.