1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (11:17 IST)

அஜித்தின் விவேகம் பட இரண்டாவது போஸ்டர் வைரலாகும் புகைப்படம்!

சிறுத்தை’ சிவா இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிக்கும் 57-வது திரைப்படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில், அஜித்துக்கு வில்லனாக நடிப்பது, பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய். அனிருத் இசையமைக்கிறார்.

 
அஜித் ரசிகர்களிடையே வைரலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தொடர்ந்து, விவேகம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்,  ரத்தக்காயத்துடன் அஜித் இருக்கும் ஸ்டில் ஒன்றை, அந்த படத்தின் இயக்குனர் சிவா வெளியிட்டார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. 
 
இந்நிலையில், நாளை அஜித்தின் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று நள்ளிரவு இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர் மற்றும் பாடல் டீசர் வெளியிடப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 
 
இந்நிலையில் விவேகம் படத்தின் இரண்டாவது போஸ்டர் என்றுக் கூறி ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில், தற்போது  வைரலாக பரவி வருகிறது. அந்தப்போஸ்டரில், தனது தோள்பட்டையில், மரம் ஒன்றை தூக்கியபடி மரண மாஸ் லுக்கில் இருக்கிறார் அஜித். ஆனால், இந்தப் போஸ்டரை, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 
 
இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து 6 பேக் வரவைத்துள்ளார். விவேகம் படம் முற்றிலுமாக அஜித் வேறு  லெவலில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.