1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2023 (09:01 IST)

உலா சுற்றுப்பயணத்தில் மேலும் சில நாடுகளை சுற்றி முடித்த அஜித்… ஷாலினி பகிர்ந்த புகைப்படங்கள்!

நடிகர் அஜித் திரைப்படங்களுக்கு இடையே தன்னுடைய மோட்டார் சைக்கிள் குழுவோடு உலக நாடுகளை சுற்றி வருகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் இப்போது அவர் ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளை தன்னுடைய இந்த சுற்றுப்பயண திட்டத்தில் முடித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி வெளியிடவே அவை கவனம் பெற்றுள்ளன.

முன்னதாக அஜித் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளை சுற்றி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.