Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியை பின்னுக்குத் தள்ளிய அஜித்

cauveri manickam| Last Modified வியாழன், 13 ஜூலை 2017 (16:10 IST)
டீஸருக்கு அதிக லைக்ஸ் பெற்றதில், ரஜினியைப் பின்னுக்குத் தள்ளி அஜித் முதலிடத்தில் உள்ளார்.
 யார் படங்கள் அதிகம் வசூலிக்கின்றன என்பதைவிட, எந்தப் படத்தின் டீஸர் அல்லது டிரெய்லர் அதிகமான பார்க்கப்பட்டிருக்கிறது, லைக்ஸ் வாங்கியிருக்கிறது என்பதுதான் தற்போதைய டிரெண்ட். எல்லாம் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் வந்தது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, ரஜினி, அஜித், விஜய் இந்த மூவரும்தான் இணைய உலகில் அதிகமாக கொண்டாடப்படுபவர்கள். தற்போதுதான் அந்த வரிசையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் தனுஷ்.

ரஜினியின் ‘கபாலி’ டீஸர்தான் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான டீஸர்களிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பெருமையைப் புரிந்துள்ளது. இதுவரை, 3 கோடியே 40 லட்சம் பேர் யூ டியூபில் ‘கபாலி’ டீஸரைப் பார்த்துள்ளனர். அந்த டீஸருக்கு, 4 லட்சத்து 64 ஆயிரம் லைக்ஸ் கிடைத்துள்ளது. ஆனால், அஜித்தின் ‘விவேகம்’ டீஸர், 4 லட்சத்து 72 ஆயிரம் லைக்ஸ் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இத்தனைக்கும் அந்த டீஸரைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே 73 லட்சம்தான் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.


இதில் மேலும் படிக்கவும் :