1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (16:23 IST)

அஜித் படத்தில் அம்மா செண்ட்டிமெண்ட் பாட்டு – யுவன் உருவாக்கும் பாடல்!

வலிமை படத்தில் அம்மா மகன் செண்ட்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வலிமை படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கிணற்றில் போட்ட கல் போல கிடக்கிறது. எந்தவிதமான அப்டேட்டும் இல்லை என்பதால் அஜித் ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர். இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரைக் காணவில்லை என்று சொல்லி போஸ்டர் அடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் இப்போது வலிமை படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் வலிமைப் படத்தில் அம்மா மகன் செண்ட்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளாராம் ஹெச் வினோத். கடைசியாக வரலாறு படத்தில் அஜித்துக்கு இதுபோன்ற காட்சிகள் அமைந்தன. இந்நிலையில் இப்போது இந்த செண்ட்டிமெண்ட் காட்சிகளுக்காக யுவன் ஷங்கர் ராஜா தனியாக ஒரு பாடலையே கம்போஸ் செய்துள்ளாராம்.