வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:20 IST)

முதல் இந்திய படம்… நெட்பிளிக்ஸில் அஜித்தின் துணிவு படைத்த சாதனை!

அஜித்தின் துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸில் உலகளவில் டாப் 5 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

சமீபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. அஜித் படங்களிலேயே மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடி தொடர்பான கதைக்களம் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளது.

இதையடுத்து திரையரங்கில் வெளியாகி 28 நாட்கள் கடந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து துணிவு திரைப்படம் இந்திய அளவில் நம்பர் 1 படமாகியுள்ளது. அதே போல துணிவு திரைப்படத்தின் மலையாளம் மற்றும் தெலுங்கு வெர்ஷனும் டாப் 10 ல் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில் இப்போது துணிவு திரைப்படம் உலகளவில் டாப் 5 க்குள் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. ஆங்கிலம் அல்லாத ஒரு படம் முதல்முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. துணிவு படத்தின் இந்தி வெர்ஷன் 3 ஆவது இடத்திலும், நான்காவது இடத்தில் தமிழ் வெர்ஷனும் இடம்பிடித்துள்ளது.