திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (15:33 IST)

ரெய்டுக்குப் பின்னர் தடைபட்டு நிற்கும் பெரிய படங்களின் ஷூட்டிங்!

நடிகர் அஜித் நடிக்கும் 61 ஆவது படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது சில நாட்களாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் படப்பிடிப்பு நடத்துவதற்கான பைனான்ஸ் கிடைக்கவில்லையாம். இந்த படத்துக்காக மதுரை அன்புச் செழியன்தான் பைனான்ஸ் செய்து வருகிறாராம். ஆனால் சமீபத்தில் தன்னுடைய அலுவலகத்தில் ரெய்ட் நடந்த நிலையில் அதன் பின்னர் அவர் தனது அடுத்த கட்ட பைனான்ஸ்களை எந்த படத்துக்கும் இன்னும் கொடுக்கவில்லையாம். இதே போல மாவீரன் திரைப்படமும் பைனான்ஸ் பிரச்சனையால் நிறுத்தப்பட்டுள்ளதாம்.