அஜித்-விஜய் ரசிகர்களிடையே சண்டையை மூட்டிவிட்ட 'வனமகன்' நாயகி
ஒரு படம் வெளிவரும்போது அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகை, இயக்குனர் என யாராவது அஜித் அல்லது விஜய் புகழை பாடுவதை கோலிவுட் ஒரு வழக்கமாக கொண்டுள்ளது. படத்தை இலவசமாக புரமோஷன் செய்ய இதை ஒரு தந்திரமாக பல வருடங்களாக கோலிவுட் திரையுலகினர் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ள 'வனமகன்' படத்தின் நாயகி சாயிஷா இன்று தனது டுவிட்டரில் தான் ஒரு அஜித் ரசிகை என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். மேலும் அஜித்துடன் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அது தனது அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சாயிஷாவின் இந்த கருத்துக்கு அஜித் ரசிகர்கள் பாராட்டியும், விஜய் ரசிகர்கள் திட்டியும் பதிவு செய்து வழக்கம்போல் தங்கள் டுவிட்டர் போரை ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.