1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (17:46 IST)

ஹிட் பட இயக்குநர் மரணம்... நிறைவேறாத அஜித்தின் ஆசை !

கடந்த பிப்ரவரி மாதம மலையாளத்தில் வெளியான படம் அய்யப்பனும் கோஷியும். இப்படத்தை இயக்குநர் சாஷீ இயக்கி இருந்தார்.

இப்படத்தில் அய்யப்பானாக பிஜூமேனன்மும், கோஷியும் அருமையாக நடித்திருந்தனர். அதாவது இரு அதிகாரிகளுக்கு இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை இப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும், இப்படத்தை ரீமேக் செய்யும் வேலைகள் கோலிவுட்டிலும் , டோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் நடந்து வருகிரது.

இப்படத்தை பார்த்த அஜித்குமார், இயக்குநர் சாஷியை அழைத்துப் பாராட்டினாராம். அவருடன் கூட்டணி சேரவும் அவர் விரும்பியதாகத் தெரிகிறது. இந்த ஊரடங்கு காலம் முடிந்து அஜித்திடன் அவர் கதை சொல்ல இருந்த நிலையில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி சாஷி உயிரிழந்தார். இதனால் தல அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனதாக செய்திகள் வெளியாகிறது.