வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:39 IST)

அஜித்தின் ''ரீல்'' மகள் ஹீரோயின் அவதாரம்....ரசிகர்கள் வாழ்த்து

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்தின் சூப்பர் ஹிட் படமான விஸ்வாசம். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா சுரேந்திரன்.

இவர் கடந்த சில மாதங்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களைப் பதிவிட்டு வந்த அவருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வந்தனர். அதேசயம அவரது சில கவர்ச்சியான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் விமர்சனமும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவரது தீவிர முயற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.  அதாவது அனிகா சுரேந்திரன் ஒரு தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் , இயக்குநர் முகமது முஸ்தபா இயக்கத்தில் வெளியான ’’கப்பேல்ல’’ என்ற ஹிட்  படத்தின் ரீமேக் தான் இது.

இப்படத்தி அன்னா பென் நடித்த முக்கிய வேடத்தில் அனிகா சுரேந்தர் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அறிவிப்புகள் விரையில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் அனிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.