திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (07:59 IST)

கலைஞருக்கு அஜித் கொடுத்த பரிசு… ரகசியத்தைப் பகிர்ந்த பிரபலம்!

நடிகர் அஜித் கலைஞர் கருணாநிதிக்கு விலையுயர்ந்த பேனா ஒன்றை பரிசாக அளித்ததாக பிரபலம் ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு திரையுலகினர் சார்பாக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. சினிமாக் கலைஞர்களுக்காக பையனூர் அருகே அப்போது நிலம் வழங்கியிருந்தார் கலைஞர். பாராட்டு விழாவில் அனைத்து நடிகர்களும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கிட்டத்தட்ட மிரட்டி அழைத்து வரப்பட்டதாக சொல்லப்பட்டது. இதை மேடையிலேயே அஜித்தும் போட்டு உடைத்தார். அதற்கு கலைஞரின் பக்கத்தில் அமர்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று கைதட்டியது பரபரப்பை உண்டாக்கியது.

இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் திமுகவினர் அஜித் மீது கோபமடைந்தனர். பின்னர் ரஜினி அஜித்தை அழைத்துச் சென்று கலைஞரை சந்தித்து பேசவைத்தார். அதனால் அப்போது பிரச்சனை சுமூகமாக முடிந்தது. பின்னர் பில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆனந்தா எல் சுரேஷ் கலைஞரைப் பார்க்க அஜித்தை அழைத்துச் சென்ற போது கலைஞருக்காக விலையுயர்ந்த பேனா ஒன்றை வாங்கிச் சென்று கொடுத்தாராம். அதைக் கலைஞரும் வாங்கிக்கொண்டு அஜித்தைத் தட்டிக்கொடுத்தாராம். இதை ஆனந்த எல் சுரேஷ் சமீபத்தைய ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.