Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலகமே அழிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை; நாங்கள் இப்படிதான்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (15:10 IST)
அஜித்தின் புகைப்படத்தை இயக்குநர் சிவா அண்மையில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை ஒருபக்கம் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர். மறுபக்கம் விஜய் ரசிகர்கள் அஜித் குட்டை பாவடை அணிந்திருப்பது போல் வெளியிட்டு கேலி செய்து வருகின்றனர்.

 

 
நாடு முழுவதும் பணத்தட்டுபாடு சூழல் நிலவி வருகிறது. இருந்தும் நடிகர்களின் ரசிகர்கள் ஒருவர் ஒருவரை மாற்றி மாற்றி கேலி செய்வதை மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. வீட்டில் பணம் இருக்குதோ இல்லையோ, அஜித் புகைப்படம் வெளியானவுடன், அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
 
மறுபக்கம் அவர்களை கேலி செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் திரியும் விஜய் ரசிகர்கள். அந்த புகைப்படத்தை எடிட் செய்து அஜித் குட்டை பாவடை அணிந்திருப்பது போல் மாற்றி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 
 
நமக்கு சொந்தமான பணத்தை வங்கிகளில் மற்றும் ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்க பிச்சைக்காரர்கள் போல் காத்திருக்கும் சூழ்நிலையிலும் ரசிகர்கள் கேலி செய்வதையும், நடிகர்களை கடவுள் போல் கொண்டாடுவதையும் நிறுத்திக் கொள்ளவில்லை. 


இதில் மேலும் படிக்கவும் :