1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (08:21 IST)

அஜித்துக்கு மீண்டும் காயம்: பரபரப்பில் வலிமை படக்குழு

தல அஜித் படப்பிடிப்பின் போது பலமுறை காயமுற்றுள்ளார் என்பதும் அவருக்கு ஏற்கனவே பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த படப்பிடிப்பில் பைக் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது நிலைதடுமாறிய அஜித் கீழே விழுந்ததால் தோள்பட்டை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த காயத்தால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்கு தேவை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
 
இருப்பினும் மருத்துவர்கள் அஜித் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் திங்கள் முதல் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாகவும், வரும் புதன்கிழமை முதல் அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் அதற்குள் அவர் முற்றிலும் குணமாகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே அஜித்தால் வலிமை படத்தின் படப்பிடிப்பில் தாமதமாகி வருவதாக ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வரும் நிலையில் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் தாமதமாகுமா? என்ற அச்சம் அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது