அஜித்தின் விவேகம் தமிழக ரிலீஸ் உரிமைக்கு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் கோலிவுட்


sivalingam| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (22:57 IST)
தல அஜித் இண்டர்நேஷனல் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் 'விவேகம்' திரைப்படத்தை எடுத்தவரை போட்டு பார்த்த படக்குழுவினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த விஷயம் லீக் ஆகி படத்தை கைப்பற்ற பெரிய போட்டியே நடக்கின்றதாம்.

 


ஒரு முன்னணி விநியோக நிறுவனம் 'விவேகம்' படத்தின் தமிழக ரிலீசுக்காக ரூ.50 கோடி வரை தரத்தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது உண்மையென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தை அடுத்து மிகப்பெரிய தமிழக வியாபாரமாக இந்த படம் இருக்கும் என்று கருதப்படுகிறத்.

அதேபோல் இந்த படத்தின் பட்ஜெட்டும் எதிர்பார்த்ததை விட அதிகமாகி இருப்பதால் இந்த படத்தை அதிக விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றவும் போட்டி நடந்து வருவதாக கூறப்படுகிறது

இன்னும் ஓரிரு நாட்களில் பல்கேரியாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். சிறுத்தை சிவாவின் பிரமாண்டமான இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :