அஜித்தின் 'விவேகம்' டீசரில் இதெல்லாமா இருக்குது? ரசிகர்கள் குஷி


sivalingam| Last Modified புதன், 19 ஏப்ரல் 2017 (19:32 IST)
அஜித் நடித்து வரும் விவேகம்' படத்தின் டீசர் வரும் மே மாதம் 1ஆம் தேதி அவருடைய பிறந்த நாள் அன்று வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சுமார் பத்து நாட்கள் மட்டுமே இருப்பதால் 'விவேகம்' டீசர் குறித்த ஹேஷ்டேக்குகள் தற்போது முதலே டுவிட்டரில் தெறித்து கொண்டிருக்கின்றன


 


இந்த நிலையில் இந்த டீசரில் என்னென்ன இருக்கின்றது என்பது குறித்த தகவல்கள் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளிவந்துள்ளது. இந்த டிசரின் முதல் 30 நொடிகள் தெறிக்க வைக்கும் இண்டர்நேஷனல் லெவல் தீம் மியூசிக். அதன் பின்னர் 16 நொடிகளுக்கு அதிர வைக்கும் பிஜிஎம் மற்றும் அஜித் பேசும் ஒரே ஒரு வசனம். பின்னர் 10 நொடிகளுக்கு இந்த படத்தின் டைட்டில் கார்டு என மொத்தம் 56 நொடிகள்தான் இந்த டீசர்.

அதுமட்டுமின்றி இந்த முதல் டீசரில் காஜல் அகர்வால், அக்சராஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு ஷாட் கூட கிடையாது என்றும் 'வேதாளம்' டீசர் போலவே அஜித் காட்சிகள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்திற்காக சமூக வலைத்தளங்கள் அதிர்கிறதோ இல்லையோ?, நிச்சயம் 'விவேகம்' அதிர வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :