1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (18:52 IST)

அஜித்தின் ‘ஏகே 63’ படத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்.. இணையத்தில் வைரல்..!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. 
 
அஜித்தின் ஏகே 63 படத்தின் டைட்டில் ’குட் பேட் அட்லி’ என்றும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு அடுத்தடுத்து இன்னும் அப்டேட்டுகள் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அஜித் ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதில் நடிக்க இருக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
விடாமுயற்சி படத்தின் அப்டேட் பல மாதங்களாக வராமல் இருந்த நிலையில் ஏகே 63 படத்தின் அப்டேட் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது 
 
Edited by Siva