1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (13:15 IST)

அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் நாயகி இவரா? 5வது முறையாக இணைவதாக தகவல்!

Ajith 62
அஜித் நடித்துள்ள துணிவு என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில் வரும் டிசம்பரில் விக்னேஷ் சிவன் இயக்கும் ’cஎன்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் இரட்டை குழந்தைகளை கவனிக்க வேண்டிய வேலை இருப்பதால் அவர் நடிக்கவில்லை என்று தெரிகிறது
 
இந்த நிலையை ஏகே 62’ படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் ஆகிய நான்கு படங்களில் அஜித்துடன் நடிகை த்ரிஷா இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக அஜித்துடன் அவர் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது 
 
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவாக உள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva