வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (16:59 IST)

அஜித் 2500 ரூபாய் சம்பளம் வாங்கினார்- சுரேஷ் மேனன் தகவல்

அஜித் 2500 ரூபாய் சம்பளம் வாங்கினார்- சுரேஷ் மேனன் தகவல்
அஜித் பாசமலர் படத்தில் நடிப்பதற்காக 2500 ரூபாய் சம்பளம் வாங்கியதாக அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.
 
சுரேஷ் மேனன் நடிகர், இயக்குனர் என பல முகங்கள் கொண்டவர். 20 வருடங்களாக சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்தவர், தற்போது சோலோ, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதி தயாரித்து, நடிக்கும் ஜூங்கா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
 
இவர் 1994-ஆம் ஆண்டு அரவிந்த் சாமி, ரேவதியை வைத்து  பாசமலர்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் அஜித் ஒரு நிமிட காட்சியில் நடித்திருப்பார்.
அஜித் 2500 ரூபாய் சம்பளம் வாங்கினார்- சுரேஷ் மேனன் தகவல்
 
அப்போது அந்த ஒரு நிமிட காட்சிக்காக அஜித் வாங்கிய சம்பளம் வெறும் 2500 ரூபாய் மட்டுமே என்றும், அவர் தற்போது  பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கும் நிலையிலும் அன்று போல் நட்போடு இப்போதும் உள்ளதாகவும், இன்று அவரது சம்பளம் 25 கோடியாக இருக்கிறது என்று சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார். மேலும், இவர் பாசமலர்கள் படத்தின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் பழைய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.