ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 24 மே 2023 (12:20 IST)

ரூ. 15 லட்சம் பைக்கை Gift' ஆக தூக்கி கொடுத்த அஜித்... யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பைக்கில் சாகச பயணம் செல்வதில் அஜித் குமார் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பைக் பயணம் செய்து வருகிறார். 
 
அத்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி நடிக்க உள்ளார். அஜித் நடிப்பை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ் , துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் மீது ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தையும் தற்போது தொடங்கி இருக்கிறார். 
 
மேலும் அஜித் தன்னுடன் பைக் ரைடு சென்ற சுகத் என்ற நபருக்கு BMW F850 GS பைக்கை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அதன் விலை சுமார் 15 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் பைக் ரைடு சென்ற போது அவர் தான் பல ஏற்பாடுகள் செய்து அவருக்கு உதவினராம். அதன் நன்றி கடனுக்காக தான் அஜித் இப்படி பரிசை கொடுத்திருக்கிறார்.