வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:33 IST)

மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸுக்கு தேதிகள் கொடுத்த அஜித்!

அஜித் நடித்த விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்தது சத்யஜோதி பிலிம்ஸ்.

தமிழ் சினிமாவின் பழம்பெருமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சத்யஜோதி பிலிம்ஸ். சமீபகமாக அதிகளவில் படங்களை தயாரித்து வருகிறது. அஜித்தை வைத்து விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களை தயாரித்த நிலையில் இப்போது மீண்டும் அஜித்தின் 62 ஆவது படத்தை தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கலாம் என சொல்லப்படுகிறது.

அஜித்தின் 61 ஆவது படத்தை ஹெச் வினோத் இயக்க, போனி கபூரே தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.