1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (10:57 IST)

ஈரோ போட்டி மைதானத்திலும் வலிமை வெறியர்கள்!? – அப்டேட் கேட்டு போர்டு!

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட்டை பல இடங்களில் கேட்டு வரும் ரசிகர்கள் ஈரோ கால்பந்து போட்டியிலும் போர்டு பிடித்துள்ளனர்.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளி வராததால் அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை அப்டேட் கேட்டு போர்டு பிடித்து வருகின்றனர்.

முன்னதாக இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் மைதானங்களில் மட்டும் அப்டேட் கேட்டு வந்தவர்கள், தற்போது ஒருபடி மேலே போய் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியிலும் நுழைந்துள்ளனர். ஈரோ உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டு போர்டு பிடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.