Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தானை அதிர விட்ட தல அஜித்


Abimukatheesh| Last Updated: வியாழன், 27 ஜூலை 2017 (17:33 IST)
வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலை ரசித்து கொண்டிருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 
சிவா - அஜித் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வேதாளம். இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா என்ற பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரையும் ரசிக்க வைத்தது. அஜித்துக்கு இந்தியாவை கடந்து நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பாகிஸ்தானிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.
 
பாகிஸ்தானைச் சேர்ந்த அதீல் கான் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆலுமா டோலுமா படல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ஆலுமா டோலுமா ஒரு சிறந்த பாடல். பாடலில் ஒரு வரிக்கூட புரியவில்லை என்றாலும் நான் ரசித்துக்கொண்டிருக்கிறேன் என்று அனிருத்-ஐ டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
 
இதற்கு அனிருத், இசைக்கு மொழியில்லை என பதில் டுவீட் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :