போனி கபூர் பிறந்தநாளில் கலந்துகொள்ளாத அஜித் – இதுதான் காரணமாம்!
நடிகர் அஜித் தனது வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அஜித், நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் முன்னணி தயாரிப்பாளருமான போனி கபூரை தமிழ் சினிமாவுக்கு தயாரிப்பாளராக தனது நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். அதையடுத்து மீண்டும் வலிமை படத்திற்கும் தயாரிப்பாளராகவே அவரே நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நீண்ட காலமாக வலிமை படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. கொரோனா வால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் போனி கபுர் சென்னையில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதற்குக் கூட வராமல் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளனர் அஜித்தும் ஹெச் வினோத்தும். எப்படியாவது வலிமை படப்பிடிப்பை சீக்கிரமாக முடித்துவிட வேண்டும் என்பதால் தீபாவளிக்கு கூட விடுமுறை எடுக்காமல் உழைத்து வருகிறதாம் படக்குழு.